உலக அமைதி வேண்டி - ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் புத்த துறவிகள் பிரார்த்தனை பேரணி..

உலக அமைதி வேண்டி - ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் புத்த துறவிகள் பிரார்த்தனை பேரணி..

உலக அமைதி வேண்டி லடாக்கில் ஆயிரக்கணக்கான ஆண் மற்றும் பெண் புத்த துறவிகள் பேரணியாகச் சென்றனர்.

பல்வேறு மடங்களைச் சேர்ந்த இவர்கள் 'மொன்லம் சென்மோ' என்ற பெயரிலான பெரிய பிரார்த்தனை திருவிழாவை ஆண்டுதோறும் கொண்டாடுவது வழக்கம்.

கொரோனாவால் கடந்த 2 ஆண்டுகளாக ரத்து செய்யப்பட்டிருந்த நிலையில் இந்த ஆண்டு வழக்கம் போல் உலக அமைதிக்கான பிரார்த்தனையுடன் கொண்டாடப்பட்டது.

லடாக்கில் மூன்றாவது திபெத்திய சந்திர மாதத்தில் இந்த விழா ஒவ்வொரு ஆண்டும்  5 நாட்கள் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.