"நாங்கள் புலம்பெயர்ந்தவர்கள், குற்றவாளிகள் அல்ல" - அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்..!

அமெரிக்காவுக்கு புகழிடம் தேடி வந்த ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் மெக்சிகோவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

"நாங்கள் புலம்பெயர்ந்தவர்கள், குற்றவாளிகள் அல்ல" - அமெரிக்காவிற்குள் நுழைய அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்..!

முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கொரோனா காலத்தில் அமல்படுத்திய சட்டத்தால் புலம்பெயர்ந்து வந்த மக்கள் அமெரிக்காவில் நுழைய முடியாமல் மெக்சிகோவில் தடுத்து நிறுத்தப்பட்டனர். பல மாதங்களாக எல்லையிலேயே தங்கியிருக்கும் அம்மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி பதாகைகளுடன் ஊர்வலமாகச் சென்றனர்.

திஜுவான- சாண்டியாகோ எல்லையை நோக்கிச் சென்ற அவர்கள் "நாங்கள் புலம்பெயர்ந்தவர்கள், குற்றவாளிகள் அல்ல" என்று முழக்கமிட்டனர். தற்போதைய அதிபர் ஜோ பைடன் இந்த சட்டத்தை திரும்பப் பெறுவதாக கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
.