ஒரே நாளில் ஆயிரக்கணக்கான டால்பின்கள் வேட்டை: அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்...

டென்மார்க்கின் பரோயே தீவுகளில் ஒரே நாளில் ஆயிரத்து 400 டால்பின்கள் வேட்டையாடப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

ஒரே நாளில் ஆயிரக்கணக்கான டால்பின்கள் வேட்டை: அதிர்ச்சியடைய வைத்த புகைப்படம்...

டால்பின்கள் வேட்டையாடப்படுவது தொடர்பாக 2009-ல் வெளியான THE COVE என்ற ஆவணப்படம் ஆஸ்கர் விருது பெற்ற படமாகும். டால்பின் வேட்டை குறித்த புலன் விசாரணை போன்று அமைந்திருந்த இப்படம் சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்தது. இதனையடுத்து டால்பின் வேட்டைக்கு உலக அளவில் பெரிதும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த நிலையில் வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் டென்மார்க்கின் பரோயே தீவுகளில் ஒரே நாளில் ஆயிரத்து 400 டால்பின்கள் வேட்டையாடப்பட்டுள்ளன.

இதேபோல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட  திமிங்கலங்களும் கொன்றூ குவிக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் டால்பின்கள், பைலட் திமிங்கலங்களை வேட்டையாடப்படுவது அதிகரித்துள்ளது. டால்பின்கள், மற்றும் திமிங்கலங்கள் கொன்று குவிக்கப்பட்டதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.