இது தான் மூன்றாம் உலக போருக்கான அறிகுறி.. ஜோ பைடன் வார்னிங்!! எதை சொல்கிறார்??

இது தான் மூன்றாம் உலக போருக்கான அறிகுறி.. ஜோ பைடன் வார்னிங்!! எதை சொல்கிறார்??

நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதலே மூன்றாம் உலகப் போர் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யா அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.  ரஷ்ய படைகளுக்கு, உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இரு நாடுகள் இடையேயான போர்  17வது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் ஆயிரத்து 582 பேர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,  ஐரோப்பாவில் உள்ள அமெரிக்க  நட்பு நாடுகளுடன் தொடர்ந்து துணை நிற்போம் என்றும்,  முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் பாதுகாப்போம் என்றும் கூறினார். உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிராக ஒருபோதும் அமெரிக்கா போரிடாது என குறிப்பிட்ட பைடன், நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான நேரடி மோதலே மூன்றாம் உலகப் போர் என்றும், உக்ரைனில் ரஷ்யாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என்றும் தெரிவித்தார்.