விமானத்தில் மாஸ்க்கை கழட்டிய முதியவரை தாக்கிய இளம் பெண்..!

சாப்பிட போனது ஒரு குத்தமா? கதிகலங்கிய முதியவர்..!

விமானத்தில் மாஸ்க்கை கழட்டிய முதியவரை தாக்கிய இளம் பெண்..!

அமெரிக்காவில் டெல்டா ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த பெண், தமது பக்கத்தில் அமர்ந்திருந்த முதியவரை கடுமையாக தாக்கும் வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது. அட்லாண்டா பகுதியில் விமானம் பறந்து சென்ற போது, அதில் பயணித்த முதியவர் மாஸ்க் அணியாமல் இருந்ததால், அவரை அந்த பெண் தாக்கியுள்ளார். முதியவர் உணவு அருந்துவதற்காக மாஸ்க்கை கழற்றியபோது பெண் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, விமானம் தரையிறங்கியதும் தாக்குதலில் ஈடுபட்ட பெண்ணை போலீசார் கைது செய்தனர்.