காதலியின் வீட்டில் இருந்து கொண்டு 1000 கோடி சம்பாதித்த இளைஞர்!!

ஊரடங்கு காலக்கட்டத்தில் காதலி வீட்டில் மாட்டிக் கொண்ட நபர் ஒருவர் கோடிக்கணக்கில் சம்பாதித்து உள்ளார்.

காதலியின் வீட்டில் இருந்து கொண்டு 1000 கோடி சம்பாதித்த இளைஞர்!!

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் ஜானி பவ்பார்ஹேட், இவர் ஒரு ஐடி ஊழியராக இருந்து வரும் இவர் ஊரடங்கு நேரத்தில் தன் காதலியின் வீட்டில் மாட்டிக்கொண்டார். அப்பொழுது ஒரு ஆப்பை டிசைன் செய்த அவர்    அதற்கான கோடிங்கையும் எழுதியுள்ளார்.  ஆப்பிற்கு அவர் ஹோபின் எனவும் பெயரிட்டுள்ளார். இந்த ஆப் குறித்து  2018ம் ஆண்டே திட்டமிட்டிருந்த அவர்அதை செய்ய நேரம் கிடைக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில்  ஊரடங்கு நேரம் அவருக்கு கைகொடுத்ததால் அவர் அந்த ஆப்பை டிசைன் செய்து வெற்றிகரமாக முடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆப்பை வெளியிட்டு அறிமுகப்படுத்திய நிலையில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது. தற்போது இந்த ஆப்பை சுமார் 50 லட்சம் பேர் பயன்படுத்த தொடங்கிவிட்டதாக சொல்கின்றனர். தற்போது இந்த ஆப்பின் மதிப்பு  4 டிரில்லியனுக்கும் அதிகமாக சென்றுவிட்டது. இந்நிலையில் ஜானி இங்கிலாந்து நாட்டின் 113 வது பணக்காரராக மாறிவிட்டார். இவர் சமீபத்தில் தனது நிறுவனத்தின் சில பங்குகளை விற்றது மூலம் சுமார் ரூ100 கோடி பெற்றுள்ளார். இவர் தன் காதலியின் பெட்டில் படுத்துக்கொண்டே கோடி கணக்கில் சம்பாதித்தது. தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.