மல மலவென பரவிய காட்டுத் தீ...அச்சத்தால் வெளியேற்றப்பட்ட மக்கள்

மல மலவென பரவிய  காட்டுத் தீ...அச்சத்தால் வெளியேற்றப்பட்ட மக்கள்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் பரவிய காட்டுத்தீ, கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

வனப்பகுதியில் பற்றிய திடீர் காட்டுத்தீயானது, பலத்த காற்றின் காரணமாக மற்ற பகுதிகளுக்கும் வேகமாகப் பரவியது.

இதனால் சுற்று வட்டாரம் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. இந்த தீயில், 150 ஏக்கர் பரப்பளவிலான வனப்பகுதி முழுமையாக அழிந்தது.

முன்னதாக லகுனா கடற்கரை பகுதியில் இருந்த மக்கள், பாதுகாப்பிற்காக வெளியேற்றப்பட்டு சாலைகள் மூடப்பட்டன. இதனைத்தொடர்ந்து பெரும் போராட்டத்திற்கு பிறகு, தீ அணைக்கப்பட்டதையடுத்து, அங்கு கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டுள்ளன.