உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் - அமெரிக்க மக்களை வெளியேற்ற தூதரகம் தீவிரம்!

உக்ரைனில் வசித்து வரும் அமெரிக்க குடிமக்கள் அனைவரும் இப்போதே புறப்பட தயாராக இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் வலியுறுத்தி வருகிறது. 

உக்ரைனில் நிலவும் போர் பதற்றம் - அமெரிக்க மக்களை வெளியேற்ற தூதரகம் தீவிரம்!

உக்ரைனில் போர் பதற்றம் நிலவி வருவதால் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டு மக்களை வெளியேற்ற முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் எல்லைப்பகுதியில் ரஷிய ராணுவமானது நெருக்கடி கொடுத்து வரும் நிலையில் எந்த நேரத்திலும் போர் தொடரும் அபாயம் இருப்பதால் அமெரிக்க தூதரகம் அந்நாட்டு குடிமக்களை இப்போதே புறப்பட தயாராக இருந்து கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது.இந்த வார தொடக்கத்தில் உக்ரைனுக்கு யாரும் பயணம் மேற்கொள்ள வேண்டாம் என அமெரிக்கா தனது குடிமக்களை வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.