எதிர்ப்பையும் மீறி தைவானுக்குள் நுழைந்த அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர்.. சீனா சும்மா விடுமா?

தைவான் அதிபரை நான்சி சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..!

எதிர்ப்பையும் மீறி தைவானுக்குள் நுழைந்த அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர்.. சீனா சும்மா விடுமா?

தைவான் வந்திறங்கியுள்ள அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசிக்கு, சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தைவான் வான்வெளிக்குள், சீன ராணுவ விமானங்கள் நுழைந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது. 

சீனா எச்சரிக்கை: அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் சபாநாயகர் நான்சி பெலோசி, கடந்த திங்கட்கிழமை ஆசிய நாடுகளுக்கான சுற்றுப் பயணத்தை  தொடங்கினார். இந்த பயணத்தின் போது, அவர் தைவான் செல்வார் எனத் தகவல் வெளியானது. தைவானை உரிமை கொண்டாடி வரும் சீனா, நான்சி பெலோசியின் வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் எச்சரிக்கையை மீறி பெலோசி தைவானுக்கு வந்தால், அது சீனாவின் உள்விவகாரங்களில் தலையிடுவது போல் ஆகும் என்றும், தங்களது ராணுவம் சும்மா இருக்காது எனவும் கூறியது. 

தைவான் வந்திறங்கிய நான்சி: இந்த நிலையில், சீனாவின் எதிர்ப்பை மீறி நான்சி பெலோசி தைவானில் தரையிறங்கினார். அங்கு அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.  அமெரிக்க அவைத் தலைவர் நான்சி பெலோசி வந்திறங்கிய நேரத்தில், தைவான் வான்வெளிக்குள், 21 சீன ராணுவ விமானங்கள் நுழைந்ததால் பதற்றம் அதிகரித்துள்ளது.

ராணவ வீரர்களுக்கு விடுப்பு மறுப்பு: அதே சமயம், தைவானில் வான்வழி உள்ளிட்ட அனைத்து தடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராணுவ வீரர்களுக்கும் விடுப்பு மறுக்கப்பட்டு, அனைவரும் பணியில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிபரை சந்திக்க இருக்கும் நான்சி: இந்த நிலையில், தைவான் சென்றுள்ள பெலோசி,  அங்கு அதிபர் சாங் இன் வென்னை சந்திக்க இருக்கிறார். இதன்பின்னர், அவர் அமெரிக்கா திரும்புவார் எனக் கூறப்படுகிறது.