80 வயதில் மறுமணம்...ஆத்திரம் தாங்காமல் தந்தையை அடித்தே கொன்ற மகன்..

முதியவர் ஒருவர் தனது 80 வயதில் மறுமணத்திற்காக திருமண தகவல் மையத்தில் பதிவு செய்ததால் மகன் அடித்து கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

80 வயதில் மறுமணம்...ஆத்திரம் தாங்காமல் தந்தையை அடித்தே கொன்ற மகன்..

மராட்டிய மாநிலமான புனேவில் ராஜ்குருநகர் என்ற பகுதியில் பேக்கரி வைத்து நடத்தி வருபவர் சேகர்.இவரது தந்தைக்கு வயது 80. சேகரின் தாயார் கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் சேகர் அவரது விட்டில் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் இருந்து வருவதாக தெரிகிறது.சேகரின் தந்தையான முதியவர் செய்தித்தாள் வாசிப்பது செல்போனை பயன்படுத்துவதில் நேரத்தை செலவழித்து வந்துள்ளார்.

சேகரின் தந்தை சில மாதங்களாக செய்தித்தாள்களில் வெளியாகும் திருமணத் தகவல்களை சேகரித்த வண்ணம் இருந்துள்ளார்.இதனை தொடர்ந்து சில தகவல் மையங்களில் தனது பதிவு செய்து இருப்பதாக மருமகளிடம் தெரியபடுத்தியுள்ளார்.இதற்கிடையில் கடந்த வியாழன் அன்று சேகர் மதிய உணவிற்காக வந்த போது அவரின் தந்தை மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.முதியவரிடம் சேகர் திருமண தகவல் மையத்தில் பெயர் பதிவு செய்துள்ளீர்களா என்றவாறு கேள்வி எழுப்பியுள்ளார். அவரது பேச்சை தொடர்ந்து முதியவர் மறுத்து உள்ளார்.அவ்வப்போது சேகர் அவர் பயன்படுத்தும் செல்போனை வாங்கி பார்த்த போது அதில் அவர் திருமண சம்மந்தப்பட்ட பதிவுகளை சேகரித்து வைத்திருப்பதும் திருமண தகவல் மையத்தில் பெயரை பதிவு செய்து அதற்கான கட்டணத்தினையும் செலுத்தி இருப்பது தெரியவந்தது.

இதனை கண்ட சேகர் முதியவர் மீது கடும் கோவத்திற்கு ஆளாகியுள்ளார்.ஆத்திரத்தில் தனது தந்தை எனவும் சிந்தித்து பார்க்காமல் கத்தியைக் கொண்டு கழுத்தை அறுக்க முயற்சி செய்துள்ளார்.அதன் பின்னதாக கல் கொண்டு முதியவரின் தலையில் கல்லை கொண்டு அடித்து கொலை செய்துள்ளார்.மேலும் தலையை துண்டிக்கவும் முயற்சி செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.மேலும் சேகர் காவல் நிலையத்தில் சென்று தனது தந்தையை கொலை செய்து விட்டதாக கூறி சரண் அடைந்துள்ளார்.இது குறித்து போலீசார் சேகர் மீது வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.