வாங்க! ஒரு நாலு நாள் ஜெயில்ல இருந்துட்டு போங்க!! - புதிதாக திறக்கப்பட்ட சிறைக்கு அழைப்பு விடுத்த மகாணம்!!

சுவிஸ் மாகணத்தில் நான்கு நாட்கள் சிறையில் செலவிட வருமாறு தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வாங்க! ஒரு நாலு நாள் ஜெயில்ல இருந்துட்டு போங்க!! - புதிதாக திறக்கப்பட்ட சிறைக்கு  அழைப்பு விடுத்த மகாணம்!!

சுவிஸ் -ல் கைதிகளுக்காக புதிதாக சிறைச்சாலை ஒன்று திறக்கப்பட்டுள்ளது. அந்த சிறையில் கைதிகளை அடைப்பதற்கு பதிலாக புது சிறையாச்சே என தன்னார்வலர்களை ஒரு நான்கு நாட்களுக்கு சிறையில் தங்கிவிட்டு போகுமாறு அழைப்பு விடுத்துள்ளனர். மேலும் இது குறித்து இந்த சோதனை முயற்சியில் பங்கேற்க வரும் தன்னார்வலர்களுக்கு பணம் ஏதும் வழங்கப்படாது எனவும் இதற்கு பதில் மூன்று வேளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிட்டு விட்டு ஓய்வெடுக்கலாம் என தெரிவித்துள்ளது.

இந்த சிறைச்சாலை சோதனையில் 18 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் குறைந்தப்பட்சம் அவர்கள் நான்கு நாட்களுக்கு சிறையில் இருக்க வேண்டும், அப்படி இருக்க  விருப்பம் இல்லையெனில் இடையில் வெளியேற அனுமதி வழங்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.   மேலும் சிறை எப்படி இருக்கும் எனவும அதனை தெரிந்து கொள்ள ஆர்வம் உள்ளவர்கள் இந்த சோதனை முயற்சிக்கு விண்ணப்பிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இவர்கள் அறிவித்து இருப்பதாவது, 

காதலர் தினத்தையொட்டி எதையாவது வித்தியாசமாக முயற்சிக்கும் வகையினை விரும்புவோர்கள் வரவேற்க்கப் படுவதாகவும் , அதற்கு நாங்களும் ஒன்று வைத்திருக்கிறோம் என தெரிவித்து, ஜோடியாக வாருங்கள் ஆனால் ஜோடியாக சிறையில் தங்க அனுமதிக்க முடியாது எனவும் ஆண்கள் ஆண்களுக்கான சிறையிலும் , பெண்கள் பெண்களுக்கான சிறையிலும் தான் தங்க முடியும்! என தெரிவித்து உள்ளது.