ஓடுபாதையில் நிலை தடுமாறிய பயணிகளின் விமானம்...மீண்டும் மேலெழுந்து பயணிகளை பதற வைத்த காட்சி!!

வேகமாக வீசிய புயலின் காரணமாக ஓடுபாதையில் நிலை தடுமாறிய விமானம் மீண்டும் தரையில் இருந்து மேலெழுந்து பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஓடுபாதையில் நிலை தடுமாறிய பயணிகளின் விமானம்...மீண்டும் மேலெழுந்து பயணிகளை பதற வைத்த காட்சி!!

வட ஐரோப்பாவில் வீசி வரும் கடும் புயலின் காரணமாக மணிக்கு 145 கிலோ மீட்டர் வரை காற்று அதிகமாக வீசி வருவதாக சொல்லப்படுகிறது. பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ஒன்று, பலத்த புயலின் காரணமாக ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்குவதை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. விபத்தினை தவிர்ப்பதற்காக விமானம் தரையிறங்க முயற்சித்துள்ளது, இருப்பினும் மீண்டும் மேலெழுந்த பயணிக்க தொடங்கியது. இதனால் விமானத்தில் இருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ காட்ட்சியானது  ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது. இதில்  “A321 பிரிட்டிஷ் ஏர்வே விமானம் முதலில் ஓடுபாதையைத் தொட முயற்சிப்பதைக் காட்டியது. பின் விமான டயர்களின் ஒரு பகுதி மட்டும் ரன்வேயை தொட்டுள்ளது. விமானத்தை வீசும் புயல் காற்றில் சரியாக தரை இறக்க முடியாததால் சாமர்த்தியமாக  சிந்தித்த விமானி விமானத்தை  மீண்டும் அப்படியே டேக் ஆப் செய்துள்ளார். இதில் விமானத்தின் பின்பகுதி லேசாக ரன்வேயில் உரசியதால் புகை எழுந்தது. இதனை தொடர்ந்து இரண்டாவது முயற்சியில் விமானி வெற்றிகரமாக விமானத்தை தரை இறக்கியுள்ளார் என்பது பகிரப்பட்ட வீடியோ காட்சியின் மூலம் தெரியவந்துள்ளது.