ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் நடு வானில் பறந்த விமானம்!!..உற்சாகத்தில் துள்ளி ஆட்டம் போட்ட பயணி!!

விமானத்தில் சுமார் 8  மணி நேரம் ஒரே ஒரு பயணி மட்டும் அதாவது தனியாக ஒரு விமானத்தில் பயணித்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது.

ஒரே ஒரு பயணிக்காக 8 மணி நேரம் நடு வானில் பறந்த விமானம்!!..உற்சாகத்தில் துள்ளி ஆட்டம் போட்ட பயணி!!

யுகேவில் இருந்து அமெரிக்காவிற்கு விமானம் மூலம் பயணித்த பிரபலமான டிக்டாக் யூசர் kai forsyth என்பவருக்கு இது ஒரு வித்தியாசமான பயணமாக அமைந்துள்ளது.யுகேவில் இருந்து ஃபோர்சித் விமானத்தில் ஏறிய போது அந்த விமானத்தில் அவர் மட்டும் தான் பயணி என்பதை அறிந்து மிகவும் ஆச்சரியப்பட்டதாக சொல்லப்படுகிறது.

எட்டு மணி நேரம் எந்தப் பயணியும் இல்லாமல் விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார்.இதனை தொடர்ந்து விமானம் முழுக்க முழுக்க காலியாக இருந்ததை கண்டு அந்த பயணி குஷியில் துள்ளிக் குதித்து தனது ஸ்மார்ட் ஃபோனை கொண்டு வீடியோக்கள் எடுத்தும் அதனை சமூக வலைதளப்பக்கங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

மேலும் விமானத்தில் இருந்த ஒரே நபர் நான் மட்டுமே என விமான குழுவினர் தெரிவித்துள்ளதாக அவர் வெளியிட்ட பதிவின் கேப்ஷனாக பதிவிட்டு பகிர்ந்துள்ளார்.இது குறித்து நான் இதுவரை நான் மேற்கொண்ட என் வாழ்நாள் விமானப் பயணங்களிலேயே இது தான் சிறந்த பயணமாகும் என அவர் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

வீடியோ மற்றும் புகைப்படங்கல் எடுத்து சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டது தொடர்ந்து தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.