பொதுவெளியில் சாக விரும்பிய நபர்...சாகும் தருவாயில் ’நான் இதைத்தான் விரும்புகிறேன்’!!மனதை அதிர வைத்த சம்பவம்

கருணைக்கொலையை விரைந்து அனுமதிக்க வேண்டும்!!

பொதுவெளியில் சாக விரும்பிய நபர்...சாகும் தருவாயில் ’நான் இதைத்தான் விரும்புகிறேன்’!!மனதை அதிர வைத்த சம்பவம்

கொலம்பியா நாட்டில் கருணைகொலை செய்துகொள்ள விரும்பிய நபர் ஒருவர் பொதுவெளியில் மக்களுக்கு முன்பாகச் சாக விரும்பியிருக்கிறார். இந்தச் சம்பவம் நோய்வாய்ப்பட்ட மனிதர்கள் மீதான பார்வையை மாற்றியிருக்கிறது.

அமெரிக்க நாடுகளில் ஒன்றான கொலம்பியாவில் வசித்து வருபவர் தான் விக்டர் எஸ்கோடார். சுமார் 60 வயதான இவர் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு  கடந்த 2 வருடங்களாக தீராத வலியினை அனுபவித்து வருகிறார்.பொதுவாக தீராத நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் அல்லது வருடக்கணக்கில் வலியால் துடித்துவருவோர்  நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்து கருணைக்கொலை செய்துகொள்ளலாம்.

அதனடிப்படையில் அவர் கடந்த அக்டோபரில் இம்பனாகோ எனும் மருத்துவமனை மூலமாக கருணைக்கொலைக்கு விண்ணப்பித்திருந்தார். ஆனால் மருத்துவர்கள் அவருடைய வலியை குணப்படுத்த இன்னும் வழிமுறைகள் இருப்பதாகக் கூறி அவருடைய கோரிக்கையை நிராகரித்தனர். இதனால் மனமுடைந்த எஸ்கோடர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தற்போது வெற்றிப்பெற்றுள்ளார்.

இதையடுத்து நோய்வாய்ப்பட்டு அவதிப்படும் பல ஆயிரக்கணக்கான மக்களின் நிலைமையை பொதுமக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாஸ்கோடர் பொதுவெளியில் வைத்து சாக  விரும்பியிருக்கிறார். அவருடைய ஆசையை நிறைவேற்ற மருத்துவர்கள் நேரலை ஒளிப்பரப்போடு எல்கோடருக்கு மயக்கஊசி போட்டு கருணைகொலை செய்துள்ளனர். மேலும் சாகும் தருவாயில் ’நான் இதைத்தான் விரும்புகிறேன்’ என்று எல்கோடர் சொன்ன ஒரு வாக்கியம் தற்போது கொலம்பியா முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

அங்கு சட்டப்பூர்வமான விஷயங்கள் குறித்து மிகவும் கவலைப்படும் மருத்துவர்கள் மற்றும் அதிகாரிகள் கருணைக்கொலையை விரைந்து அனுமதிக்க வேண்டும் என்பதற்காகவே எல்கோடர் இப்படி பொதுவெளியில் கருணைகொலை செய்துகொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.