மூடநம்பிக்கையின் உச்சம்... ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த சாமியார்

ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்று கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்துள்ள சம்பவம் பாகிஸ்தானில் அரங்கேறியுள்ளது.

மூடநம்பிக்கையின் உச்சம்... ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த சாமியார்

பாகிஸ்தானில் வசிக்கும் ஒரு தம்பதிக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளன. அப்பெண் தற்போது மீண்டும் கர்ப்பம் அடைந்துள்ளார். ஆனால் தனக்கு குழந்தை ஆணாக பிறக்க வேண்டும் என தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். எனினும் பிறக்கும் குழந்தை ஆணாக இருக்க வேண்டும் என்பதற்காக சில சடங்குகளை செய்யுமாறு உள்ளூர் சாமியார் ஒருவர் கூறியுள்ளார்.

 அந்த வகையில் சடங்குகள் செய்வதாக கூறி, கர்ப்பிணியை வரவழைத்து, தலையில் ஆணி அடித்துள்ளார். இதற்கிடையே, கர்ப்பிணி பெண் தலையில் ஆணி அடித்த புகைப்பட காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து பெஷாவர் போலீசார் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு ஆணி அகற்றப்பட்டு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக டாக்டர்கள் கூறுகையில், அந்தப் பெண்ணின் தலையில் 2 இஞ்சுக்கு அதிகமாக ஆணி புகுந்திருந்தது எக்ஸ்ரேவில் தெரிந்தது. ஆணியின் முனை மூளையில் பட்டிருந்தால் பெரும் பாதிப்பு உண்டாகி இருக்கும் என தெரிவித்தனர்.

அப்பெண்ணுக்கு பெரியளவில் பாதிப்பில் இருந்து தப்பியுள்ளார். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆண் குழந்தைக்காக கர்ப்பிணி தலையில் ஆணி அடிக்கப்பட்ட சம்பவம் பாகிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.