ஆழம் இல்லாத குளத்தில் ’டைவ்’ அடித்த பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்!!

2022-ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பான முறையில் அமையவில்லை...

ஆழம் இல்லாத குளத்தில் ’டைவ்’ அடித்த பிரபல நடிகைக்கு நேர்ந்த சோகம்!!

ஆழம் இல்லாத குளத்தில் டைவ் அடித்த நடிகையின் கழுத்து உடைந்து போன சம்பவம் ஆஸ்திரேலியாவில் அரங்கேறியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பிரபல நடிகையான அல்லி சிம்ப்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் மருத்துவமனையில் இருப்பதாக கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில் அவர், தான் ஆழம் அதிகம் இல்லாத ஒரு குளத்தில்  ’டைவ்’ அடிக்க முயன்று எதிர்பாராதவிதமாக என் கழுத்து உடைந்துபோனது. தான் அதிலிருந்து உயிருடன் தப்பியது அதிர்ஷ்டம் என்றும், 4 மாதங்களுக்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டி இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சிகிச்சையில் இருந்தவாறே இந்தப் பதிவை வெளியிட்ட இவர் தற்போது குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில்   சிகிச்சை எடுத்து வருவதாகவும், மேலும் தனக்கு 2022-ஆம் ஆண்டின் தொடக்கம் சிறப்பான முறையில் அமையவில்லை என்றும் அவர் கூறினார்.