காணாமல் போன விமானம் கடலில் விழுந்திருக்கலாம் - ஜப்பான் அரசு தகவல்

காணாமல் போன விமானம் கடலில் விழுந்திருக்கலாம் -  ஜப்பான் அரசு தகவல்

ஜப்பானில், காணாமல்போன போர் விமானம், கடலில் விழுந்திருக்கலாம் என்று அந்நாட்டு பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

கொமாட்சு விமானப் படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் அந்த விமானத்துடனான தரைக்கட்டுப்பாட்டு அறைத் தொடர்பு  துண்டிக்கப்பட்டது. இதையடுத்து, இரு விமானங்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டன. விமானம் கடலில் விழுந்திருக்கலாம் என்று சந்தேகப்படுவதால் கடற்படைக் கப்பல்கள் தேடுதல் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் பாதுகாப்புத்துறை அமைச்சர் நொபுயோ கிஷி தெரிவித்துள்ளார்.