உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா? அதிபர் புடினின் உத்தரவை வீரர்கள் மறுக்க காரணம் என்ன?

உக்ரைன் போரின் போது புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டாலும், அவரது மூத்த இராணுவத் தளபதிகள் அவரது உத்தரவை நிறைவேற்றமாட்டார்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் போரில் அணு ஆயுதம் பயன்படுத்தப்படுமா? அதிபர் புடினின் உத்தரவை வீரர்கள் மறுக்க காரணம் என்ன?

ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதுமே அணு ஆயுதங்களை தயாராக வைத்துவிட்டார் புடின். அவர் எப்போது வேண்டுமானாலும் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தலாம் என்ற ஒரு அச்சம் உருவாகியது. அவ்வப்போது ரஷ்ய தொலைக்காட்சியில் புடின் ஆதரவு ஊடகவியலாளர்களும் அணுகுண்டு வீசுவோம் என மிரட்டிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால், அப்படி புடின் அணு ஆயுதங்களை பயன்படுத்த உத்தரவிட்டாலும், அவரது மூத்த இராணுவத் தளபதிகள் அவரது உத்தரவை நிறைவேற்றமாட்டார்கள் என ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

அதற்குக் காரணம், புடினுடைய உடல் நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவர் இன்னும் சில மாதங்களில் இறந்துவிடுவார் என்றும் பல மூத்த ராணுவத் தளபதிகளும் பாதுகாப்பு அதிகாரிகளும், ரஷ்ய செல்வந்தர்களும் நம்புகிறார்களாம். இந்த தகவலை வெளியிட்டுள்ள ரஷ்ய விவகாரங்கள் நிபுணரான Christo Grozev என்பவர், அப்படி புடினுடைய உத்தரவுக்கு இணங்கி அணுகுண்டு வீசினால், அதற்குப் பிறகு அவர் சீக்கிரம் உயிரிழந்துவிட, தாங்கள் சர்வதேச நாடுகள் முன் விசாரணைக்கு நிற்கவேண்டி வரும் என ரஷ்ய ராணுவத் தளபதிகள் அஞ்சுவதாக தெரிவித்துள்ளார். எனவே  புடின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த உத்தரவிட்டாலும், அவர்கள் புடினுடைய உத்தரவுக்கு அடிபணியமாட்டார்கள் என்று Grozev கூறியுள்ளார்.