சீனாவின் டென்னிஸ் வீராங்கனை மாயம்... மகளிர் டென்னிஸ் போட்டிகள் ரத்து...

சீன டென்னிஸ் வீராங்கனை காணாமல்போனது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சீனாவின் டென்னிஸ் வீராங்கனை மாயம்... மகளிர் டென்னிஸ் போட்டிகள் ரத்து...

சீனாவின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெங் ஷுவாய். இவர் அந்நாட்டின் முக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவருக்கு எதிராக பாலியல் புகார் அளித்தை தொடர்ந்து இரு வாரங்களுக்கு முன்பு மாயமானார்.

இந்நிலையில் பெங் ஷுவாயின் எங்கிருக்கிறார் என்பது குறித்த உண்மையாக ஆதாரங்களை அளிக்குமாறு சீனாவிடம் பிரிட்டன் வலியுறுத்தியுள்ளது. விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபனில் பட்டங்களை வென்ற உலகளவில் மிகவும் பிரபலமான டென்னிஸ் வீராங்கணை காணாமல் போயுள்ளது உலக நாடுகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில் சீனாவில் நடைபெறயிருந்த மகளிர் டென்னிஸ் போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் டென்னிஸ் சங்கம் அறிவித்துள்ளது.