உலகை விட்டு சென்றார் கிரீஸின் கடைசி மன்னர்....

உலகை விட்டு சென்றார் கிரீஸின் கடைசி மன்னர்....

கிரீஸ் நாட்டின் கடைசி மன்னர் அவரது 82வது வயதில் இன்று உயிரிழந்தார். 

மக்களாட்சி:

கிரீஸ் நாட்டின் மன்னாராக 1964 முதல் 1973 வரை பதவி வகித்தவர் 2-ம் கான்ஸ்டென்னின்.  1974-ம் ஆண்டு கிரீசில் மன்னராட்சி முறை ஒழிக்கப்பட்டு, மக்களாட்சி முறை கொண்டுவரப்பட்டது. 

கடைசி மன்னர்:

அப்போது கிரீஸ் நாட்டின் மன்னராக இருந்தவர் 2-ம் கான்ஸ்டென்னின்.  இதனால் அந்நாட்டின் கடைசி மன்னர் என்ற பெருமையை பெற்றார்.  

உயிரிழப்பு:

இந்நிலையில், கிரீஸ் நாட்டின் கடைசி மன்னரான 2-ம் கான்ஸ்டெனினின் வயது முதிர்வு, உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார்.  ஏதேன்சில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தனது 82 வயதில் இன்று உயிரிழந்தார்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  ஐக்கிய அரபு அமீரக அதிபரை சந்தித்த பாகிஸ்தான் தளபதி....எதற்காக?!!