நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ஜன்னலை உடைத்த ஐஸ் கட்டி!!

லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் விமானத்தின் ஜன்னல் நடுவானில் உடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தின் ஜன்னலை உடைத்த ஐஸ் கட்டி!!

கோஸ்டா ரிக்காவை நோக்கி புறப்பட்ட பிரிட்டிஷ் விமானம் 35000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக விமானத்தின் ஜன்னல் கண்ணாடி ஐஸ் கட்டி மோதியதால் உடைந்துள்ளது.இச்சம்பவம் குறித்து விசாரணைகள் தொடங்கப்பட்ட நிலையில் தற்போது இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமானமானது 35000 அடி உயரத்தில் 200 பயணிகளோடு சென்றதாக சொல்லப்படுகிறது.பொதுவாகாவே விண்வெளி சம்பந்தப்பட்ட செயல்கள் அனைத்திற்கும் தகுந்த பாதுகப்புகள் செய்யப்பட்டிருக்கும்.இந்த நிலையில் பயணிகளை ஏற்றி செல்லும் விமானத்தில் பல உயிர்களை காக்கும் முறையில் பல்வேறு ஏற்பாடுகள் பாதுகாப்பாக செய்யப்பட்டிருப்பது வழக்கம்.

இதனை தொடர்ந்து விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைபட்ட சம்பவம் குழப்பத்தில் அழ்த்தியது.இது குறித்து தொடரப்பட்ட விசாரணையில் ஜன்னல் கண்ணாடியின் தரம் பொதுவாகவே இரட்டிப்பு கனமாக இருக்கும் துப்பாக்கி குண்டுகளை உள் நுழையாத அளவிற்கு கடினமாக இருக்கும் எனவும் அதனை ஐஸ் கட்டி உடைத்திருப்பது பல கேள்விகளை எழுப்பியது.இதில் 200 பயணிகள் கிறித்துமஸ் தினத்தை கொண்டாடுவதற்காக பயணம் செய்துள்ளனர்.அப்போது தான் இந்த வினொத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

விமான ஜன்னல்களை ஐஸ்கட்டி ஒன்று அதிவேகத்தில் வந்து உடைத்ததில் கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமாகமல் விரிசல் விடப்பட்ட நிலைக்கு தள்ளியது ஜன்னலில் ஏற்பட்ட விரிசலில் காற்று உள் நுழைய ஆரம்பித்துள்ளது அங்கிருக்கும் பொருட்களை வைத்து அதிகாரிகள் அதனை அடைத்து அங்கு அமர்ந்திருந்த பயணிகளை மட்டும் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றியுள்ளனர்..

அதிவேகத்தில் சென்ற விமானத்தின் வேகத்தை படிப்படியாக குறைத்த நிலையில் விமானம் பாதுகாப்பாக தரையிறங்கிய நிலையில் விமானத்தில் பயணித்த அனைத்து உயிர்களும் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டுள்ளனர்.இதன் பின்னர் இதற்கான உண்மையான காரணமாக இந்த விமானம் பறந்த அதே வேளையில் எதிர் திசையில் வேறு விமானம் ஒன்று 1000 அடி உயரத்தில் பறந்துள்ளது.

அந்த விமானத்தின் மீது படிதிருந்த ஐஸ்கட்டிகள் வேகமாக பறந்து கீழே விழுந்த நிலையில் இந்த விமானத்தில் ஜன்னலின் மீது பட்டதாக சொல்லப்படுகிறது.மேலும் இது கோடியில் ஒருமுறை மட்டுமே இப்படிபட்ட சம்பவங்கள் நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.இது குறித்து விமான பயணிகளான அனைவருக்கும் வியப்பாக இருந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.