மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோள்.. விண்ணில் செலுத்த ஐரோப்பா திட்டம்

மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோளை நடப்பாண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்த ஐரோப்பா திட்டமிட்டுள்ளது.  

மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோள்..  விண்ணில் செலுத்த ஐரோப்பா திட்டம்

மரத்தால் செய்யப்பட்ட முதல் செயற்கைக்கோளை நடப்பாண்டு இறுதிக்குள் விண்ணில் செலுத்த ஐரோப்பா திட்டமிட்டுள்ளது.  

விண்வெளி கல்வி தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து இதனை செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள ஐரோப்பாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம், குயூப் வடிவிலான அந்த செயற்கைக்கோளுக்கு விசா வுட்சாட்’ என பெயரிட்டுள்ளது.

பிளைவுட் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளை பின்லாந்து உருவாக்கியுள்ளது. இதன் சோதனை முயற்சி வெற்றியடையும் பட்சத்தில் நடப்பாண்டு இறுதியில் அந்த செயற்கைக்கோளானது விண்ணில் ஏவப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் குளிர், அதிக வெப்பம், வெற்றிடம் மற்றும் கதிர்வீச்சு நிறைந்த இடங்களிலும் தரவுகளை சேகரிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.. இந்த செயற்கைக்கோளின் நீளம், அகலம் மற்றும் உயரம் வெறும் 10 சென்டி மீட்டர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.