இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த சகோதரர்கள்..74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்வு!!

தேசப்பிரிவினையால் பிரிந்த உறவு,பல ஆண்டுகள் கழித்து இணைந்த நெகிழ்ச்சி தருணம்.

இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது பிரிந்த சகோதரர்கள்..74 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்த நிகழ்வு!!

சித்திக் மற்றும் ஹபிப் ஆகிய இரு சகோதரர்களும் 1947 ஆம் ஆண்டின் போது நிகழ்ந்த இந்தியா பாகிஸ்தான் பிரிவினைவின் போது சித்திக் பாகிஸ்தானிலும் அவருடைய அண்ணனான ஹபிப் பஞ்சாப்பிலும் தஞ்சம் அடைந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்தியா பாகிஸ்தான் இணையும் பஞ்சாப்பின் எல்லை பகுதிகளில் ஒன்றான கர்தார்பூர் நுழைவு பகுதியில் 74 ஆண்டுகளுக்கு பிறகு இரு சகோதரர்களும் நேற்று சந்தித்துள்ளனர்.

இவர்களின் சந்திப்பின் போது ஒருவரை ஒருவர் கட்டி தழுவி கொள்ளும் நெகிழ்ச்சி மிக்க தருணமாக இருந்த வீடியோ சமூக வலைதளபக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இந்த சம்பவம் அனைவரின் மத்தியில் பெருமிதமாக பேசப்பட்டு வருகிறது.