வேவு பார்க்க எல்லை தாண்டி வந்த ட்ரோன்... விரட்டியடித்த எல்லை பாதுகாப்பு படை!

வேவு பார்க்க எல்லை தாண்டி வந்த ட்ரோன்... விரட்டியடித்த எல்லை பாதுகாப்பு படை!

ஜம்மூ காஷ்மீரில் சர்வதேச எல்லைக்கு அருகே வானில் ட்ரோன் நடமாட்டம் தென்பட்டதாக எல்லை பாதுகாப்பு படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மூ காஷ்மீரின்  ஆர்எஸ் புராவின் அர்னியா செக்டர் என்னும் பகுதியில் சர்வதேச எல்லைக்கு அருகே இன்று அதிகாலை 4.45 மணி அளவில் வானில் ட்ரோன் நடமாட்டத்தை எல்லை பாதுகாப்பு படையினர் கண்டுள்ளனர்.

இதையடுத்து ட்ரோனை நோக்கி எல்லை பாதுகாப்பு படையினர் துப்பாக்கி சூடு நடத்தியதாகவும் ட்ரோன் பாகிஸ்தான் பக்கம் திரும்பிச் சென்றதாகவும் கூறப்படுகிறது. இந்திய ராணுவ நிலைகளை குறித்து பாகிஸ்தான் கடந்த ஆண்டு ட்ரோன் தாக்குதலை நிகழ்த்தியதில் இருந்து இந்திய ராணுவ நிலைகளை அவ்வப்போது பாகிஸ்தான் ட்ரோன் மூலம் கண்காணிக்க முயன்று வருவது தொடர்கதையாகியுள்ளது. ஆனால் இதனை இந்திய ராணுவத்தினர் முறியடித்து வருகின்றனர்.