தனிமை படுத்துவதாக நாட்டு மக்களை துன்புறுத்தி வரும் கொடூரம்..

கொரோனா பரவலை கட்டு படுத்தும் நோக்கில் நாட்டு மக்களை சிறையில் அடைத்து தனிமைப்படுத்தி வருகின்றனர்.

தனிமை படுத்துவதாக நாட்டு மக்களை துன்புறுத்தி வரும் கொடூரம்..

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் போது கண்டறியப்பட்ட கொரோனா அந்நாட்டில் வேகமாக பரவ தொடங்கியது அடுத்து நாட்டு மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.இதனை தொடர்ந்து பல்வேறு நாடுகளுக்கு கொரோனா பரவி மக்களிடையே அச்சத்தையும் உயிரிழப்புகளையும் சந்திக்க தொடங்கினர்.இந்த கொரோனாவால் பல நாடுகள் பொருளாதாரத்தில் பின் தங்கியும் இருந்து வருகின்றனர்.கிட்டதட்ட இரு ஆண்டுகளாக மக்களிடையே கோரத் தாண்டவம் ஆடி வரும் கொரோனா பல வகையில் உருமாற்றம் அடைந்து பரவி வருகிறது.இதனை தொடர்ந்து நாட்டு மக்களின் பாதுகாப்பிற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.மேலும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டும் வந்தனர்.

இதனை தொடர்ந்து உருமாறி இருக்கும் ஒமிக்ரான் இடமிருந்து நாட்டு  மக்களை பாதுகாக்கும் பொருட்டு தனிமைபடுத்தும் பெயரில் சீனா செய்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில் சிலருக்கு ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டது.சீனாவில் அன்யாங் நகரத்தில் வசிக்கும் மக்களில் இரண்டு பேருக்கு பாதிப்பு சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 55 லட்சம் மக்கள் வரை வசிக்கும் அன்யாங் நகரத்தில் முழு ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்து அரசு உத்தரவிட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் முகாம்களில் தங்க வேண்டும் எனவும் அரசு கூறியுள்ளது. இதையடுத்து ஜியான் நகரில் முகாம்கள் அமைக்கப்பட்டன.

அந்த முகாம்களில் மக்கள் இரண்டு வாரங்கள் தங்கி இருக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து அதிக அளவிலான மக்கள் தனிமை படுத்துவதற்கு அனுமதித்ததாக சொல்லப்பட்டனர்.இதில் சிறிய அறைகள் போன்று பெட்டிகளை உருவாக்கி மக்களை அதில் அடைத்து வந்ததாக தெரிகிறது.அத்தியாவசிய பொருட்களை வாங்கவோ தேவைக்கு வெளியே வர முடியாத வகையில் கடும் கட்டுபாடுகள் போடப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. மேலும் இதிலிருக்கும் மக்கள் உணவு கேட்டு வரும் நிலையில் அவர்களை அடித்து துன்புறுத்தும் காட்சிகள் தற்போது வெளிவந்த வண்ணம் உள்ளன.]

குழந்தைகளோடு இருக்கும் பெற்றோர்களை தனிமைபடுத்தும் முகாமில் ஒரே அறையில் அனைவரையும் அடைத்து வைத்திருப்பது வேதனை அளிப்பதாக தெரிவிக்கின்றனர்.இப்படிப்பட்ட செயல்களை செய்து வரும் சீனாவின் மீது கடும் கண்டனங்கள் தொடரப்பட்டன.அடுத்த மாதம் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடக்க இருப்பதால் கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு கடும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.இதனை காரணமாக கொண்டு நாட்டு மக்களை கொடுமை படுத்துவது சரியானதா, என்பது பற்றி கேள்விகள் எழ தொடங்கியதாக சொல்லப்படுகிறது. மேலும் தனது நாட்டில் கொரோனா பாதிப்பு இல்லை என அந்நாட்டு அரசு கூறினாலும் தற்போது வெளிவந்த வீடியோ காட்சிகள் சீனாவின் கொடூர முகத்தை காட்டிருப்பது குறிப்பிடத்தக்கதாக இருக்கும் என கூறியுள்ளனர்.