குழந்தைகள் பக்கம் நெருங்கி வந்த முதலையை சாமர்த்தியமாக குப்பை தொட்டியை கொண்டு பிடித்த வீரர்... திக் திக் வீடியோ!!

முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் செம்ம கெத்தாக குப்பை தொட்டியை வைத்து முதலையை பிடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

குழந்தைகள் பக்கம் நெருங்கி வந்த முதலையை சாமர்த்தியமாக குப்பை தொட்டியை கொண்டு பிடித்த வீரர்... திக் திக் வீடியோ!!

அமெரிக்கா, புளோரிடாவில் உள்ள தனது தோட்டத்தில் உலா வந்த முதலையை வெற்றிகரமாக எதிர்த்துப் போராடி, குப்பைத் தொட்டியைப் பயன்படுத்தி ராணுவ வீரர் ஒருவர் பிடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் ராணுவ வீரரான யூஜின் போஸி தன்னைக் காத்துக் கொள்ள குப்பைத் தொட்டியை வைத்து 6 அடி முதலையை எதிர்கொண்டார். அந்த முதலையின் பக்கத்தில் மெதுவாக குப்பை தொட்டியை எடுத்து சென்று அதை அப்படியே அதில் வைத்து அடைத்து, குப்பை தொட்டியை தூக்கினார். பின்னர் முதலையைப் பிடித்த அவர் குப்பைத் தொட்டியை ஒரு புதர் நிறைந்த பகுதிக்கு எடுத்துச் சென்று ஒரு ஏரியின் அருகே தொட்டியை உதைத்து விட்டு ஓடினார். குப்பை தொட்டியில் இருந்து வெளியே வந்த முதலை அந்த புதருக்குள் சென்றது.

தனி ஒரு நபராக நின்று முதலையை பிடித்த அந்த ராணுவ வீரரின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், அவரை அனைவரும் ஹீரோவாக பார்க்கின்றனர். இது குறித்து அந்த நபர் கூறியது: அக்கம் பக்கத்தில் பல குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்ததால், அந்த நேரத்தில் அவர்களின் பாதுகாப்பு மட்டுமே என மனதில் வந்தது, அதனால் முதலையை பிடிக்க முடிவு செய்தேன் என கூறினார்.