கொதிக்கும் சூப்பில் விழுந்த சமையல்காரர்., 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு.,

 கொதிக்கும் சூப்பில் விழுந்த சமையல்காரர்., 5 நாட்களுக்கு பின் உயிரிழப்பு.,

கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப்பிற்குள் விழுந்து சமையல்காரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஈராக்கில் வடக்கு பகுதியில் இருக்கும் மாவட்டமான ஜாகோவில் உள்ள ஒரு நகரத்தில் நடைபெற்ற விருந்தில் இஸ்மாயில் என்ற சமையல்காரர் ஒரு பெரிய பானையில் கோழி சூப் தயாரித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி கொதித்துக் கொண்டிருந்த கோழி சூப் பானைக்குள் விழுந்துள்ளார். இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்   70% தீக்காயங்களுடன் இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் அவர் உயிரை காப்பாற்ற கடும் முயற்சிகளையும் செய்தனர். ஆனால் அந்த முயற்சிகள் எதுவும் பலிக்காமல் 5 நாட்களுக்கு பிறகு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  

இது குறித்து உயிரிழந்த இஸ்மாயீலின் உறவினர்கள் கூறும்போது, அவர் பல வருடம் இதில் அனுபவமுள்ளவர், ஆனால் அவருக்கு இப்படி நடந்தது அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறினர்.மேலும் இறந்தவருக்கு ஆறு மாத சிறுவன் உட்பட மூன்று குழந்தைகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.