தலைநகரங்களை கைப்பற்றி வரும் தாலிபான்கள்... ஆப்கனின் தொடரும் பதட்டம்...

ஆப்கனின் மாகாண தலைநகரங்களை கைப்பற்றி வரும் தாலிபான்கள்

தலைநகரங்களை கைப்பற்றி வரும் தாலிபான்கள்... ஆப்கனின் தொடரும் பதட்டம்...

ஆப்கானிஸ்தானின் ஒரே நாளில் 3 பெரும் மாகாண தலைநகரங்களை தாலிபான்கள் படை கைப்பற்றியுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறி வருவதை தொடர்ந்து அங்கு தாலிபான்களின் கை ஓங்கி வருகிறது.

ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட்ட தாலிபான்கள் மாகாண தலைநகரங்களில் நுழையாமல் இருந்தனர். இந்த நிலையில் தற்போது மாகாண தலைநகரங்களையும் கைப்பற்ற தொடங்கியுள்ளனர். பெரும் மாகாண தலைநகமான குண்டூஸ் என்னும் பகுதியை தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டனர்.

மதியம் ஆப்கன் படைக்கும் தாலிபான்கள் படைக்கும் இடையே நடைபெற்ற பயங்கர மோதலில் ராணுவத்தினரை விட்டியடித்துவிட்டு குண்டூஸ் பகுதியை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதேபோல் நேற்று ஒரே நாளில் தாகார், ஜவ்ஜான், நிம்ரோஸ் ஆகிய தலைநகரங்களையும் தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானின் பெரும்பான்மையான பகுதி தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டது.