காதலியை ஜாமீனில் எடுக்க ஓட்டலில் கொள்ளையடித்த காதலன் - அமெரிக்காவில் மரண தண்டனை !!

அமெரிக்காவில் 2022 ல் முதல் மரண தண்டனையாக காதலிக்காக கொள்ளை அடித்த காதலனுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது.

காதலியை ஜாமீனில் எடுக்க ஓட்டலில் கொள்ளையடித்த காதலன் - அமெரிக்காவில் மரண தண்டனை !!

அமெரிக்காவில் ஒக்லஹோமா மாகாணத்தில் வசித்து வந்த டொனால்டு கிராண்ட் என்பவர் கடந்த 2001 ஆம் ஆண்டின் போது தனது 25 வயதில் ஓட்டல் ஒன்றில் இருவரை கொலை செய்து விட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றதாக சொல்லப்படுகிறது.

டொனால்டு கிராண்ட் ஒரு ஊழியரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்து விட்டு மற்றொரு நபரை கத்தியால் கொலை செய்ததும் தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது ஜெயிலில் இருக்கும் அவரது காதலியை ஜாமீனில் எடுக்க பணம் தேவைப்பட்டதாகவும் இதன் காரணமாக தான் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

விசாரணையின் முடிவில் அவருக்கு நீதிமன்றமானது கடந்த 2005 ஆம் ஆண்டில் மரண தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்ததாக சொல்லப்படுகிறது. மேலும் இதில் இவருக்கு சாதகமாக தீர்ப்பு அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அவருக்கு மரண தண்டனை உறுதிசெய்யப்பட்டது.  அமெரிக்காவில் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்ததால் டொனால்டு கிராண்டின் தண்டனை நிறைவேற்றம் தள்ளிப்போனது. பல்வேறு மாகாணங்களில் மரண தண்டனை நிறைவேற்றம் செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒக்லஹோமா மாகாணமும் ஒன்று. கடந்த 2015-ம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்ற தடைவிதிக்கப்பட்டது. அந்த தடை கடந்த ஆண்டு நீக்கப்பட்டது. இந்த நிலையில் டொனால்டு கிராண்டிற்கு மூன்று விஷ ஊசிகள் செலுத்தப்பட்டு மரண் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவில் 23 மாநிலங்களில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.