பொம்மைகளால் நிறைந்த வீடு...நொடியில் தப்பித்த சிறுவன்!!

பொம்மைகளால் நிறைந்த வீடு...நொடியில் தப்பித்த சிறுவன்!!

சிறுவன் விளையாடி மகிழ்வதற்காக பொம்மைகள் வைக்கப்பட்டிருந்த அறையில் கொடிய விஷ பாம்பு இருந்துள்ளது. இதனை அறியாத சிறுவன் அந்த அறையிலேயே விளையாடிக் கொண்டிருக்க அதிர்ஷ்டவசமாக பாம்பின் பிடியில் இருந்து தப்பித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில் சென்ட்ரல் கோஸ்ட் பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் அறை முழுவதும் தனது மகன் விளையாடி மகிழ்வதற்காக விளையாட்டு பொருட்களான பொம்மை சாமன்களை வாங்கி குவித்துள்ளனர். இந்த நிலையில் அந்த சிறுவனோ அந்த அறையில் நாள்தோறும் விளையாடி மகிழ்ந்து கொண்டிருக்க திடீரென ஒரு நாள் அந்த அறையில் உள்ள அலமாரியில் இருந்து விசித்திரமான சத்தம் வந்ததை அறிந்த தம்பதிகளான சிறுவனின் பெற்றோர் அதனை பார்க்க சென்ற போது அலமாரி உள்ளே பொம்மைகள் மற்றும் துணிகள் இருக்க அதனுடன்  red-bellied black என சொல்லப்படும் கொடிய வகையான விஷப்பாம்பும் ஒன்றும் இருந்துள்ளது.

அதனை கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் தன் மகனை அழைத்து கொண்டு அறையை விட்டு வெளியேறி அறையின் கதவை உடனடியாக மூடியுள்ளனர். மேலும் அந்த அறையின் கதவின் கீழ் பக்கம் வழியாக பாம்பு வெளியே வராமல் இருக்க துணிகளை கொண்டும் அடைத்துள்ளனர். 

இதன் பின்னர் இருவரும் பாம்பு பிடிப்பதில் வல்லவராக திகழ்ந்த மேட் ஸ்டாப்போர்ட் என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனை அறிந்து அப்பகுதிக்கு வந்த அவர், நீண்ட நேர போராட்டத்திற்கு பின்னர் பதுங்கி இருந்த கொடிய விஷமுள்ள பாம்பை பிடித்துள்ளார்.

அந்த பாம்பை பிடித்த மேட் கூறுகையில் வெப்பமான பகுதிகளில் தான் இந்த வகையான பாம்புகள் காணப்படுவதாகவும் சமீபத்தில் மட்டுமே 4 பாம்புகளை சில வீடுகளில் இருந்து பிடித்தேன் எனவும் கூறியுள்ளார்.