கல்யாண வீட்டின் இசைக்கருவிகளை தீயிட்டு எரித்து அட்டூழியம்...

திருமண வீட்டில் புகுந்து இசைக் கலைஞரின் இசை கருவிகளை தாலிபான்கள் தீயிட்டு எரிக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி  வருகிறது.

கல்யாண வீட்டின் இசைக்கருவிகளை தீயிட்டு எரித்து அட்டூழியம்...

தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதிலிருந்து பல விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தன.இதில் பெண்கள் டிவி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க்க கூடாது என ஆப்கான் அரசு உத்தரவிட்டது.இதனை தொடர்ந்து ஜவுளி கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் ஆண் மற்றும் பெண் பொம்மைகள் தலையின்றி வைக்கப்பட வேண்டும் என பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து திருமண விழாக்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட கூடாது எனவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த நிலையில் பாக்தியா மாகாணத்தில் உள்ள ஸ்ஸாய் அருப் மாவட்டத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்த அரங்கத்திற்குள் தாலிபான்கள் அதிரடியாக நுழைந்துள்ளனர்.அங்கு இசை நிகழ்ச்சி நடந்துகொண்டிருந்த போது இசை கலைஞர் வாசித்து கொண்டிருந்த இசை கருவிகளை கைப்பற்றியதோடு அதற்கு தீ வைத்து எரித்துள்ளனர்.

தீயில் எரிந்து சாம்பலாகும் இசைக்கருவிகளை கண்டு இசை கலைஞர் கதறியபடி அழுந்துள்ளார்.அவரை பார்த்த தாலிபான்கள் கைக்கூட்டி சிரித்ததாக சொல்லப்படுகிறது.அந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற பத்திரிக்கையாளர் ஒருவர் அதனை வீடியோ காட்சிகளாக பதிவு செய்து சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு உள்ளார்.தாலிபான்களின் இப்படிப்பட்ட இந்த செயலை கண்டு உலக அளவில் இருந்து வரும் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகிறார்கள்.