குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்து கொண்ட நடிகை!

2022 ஆம் ஆண்டு தனக்கு சிறப்பாக அமையவில்லை என வருத்தம் தெரிவித்து வரும் நடிகை.

குளத்தில் டைவ் அடித்து கழுத்தை உடைத்து கொண்ட நடிகை!

ஆஸ்திரேலிய நாட்டை சேர்ந்த அல்லி சிம்ப்சன் என்பவர் ஆழம் அதிகம் இருப்பதாக நினைத்து குளத்தில் டைவ் அடித்ததாக சொல்லப்படுகிறது.ஆனால் குளத்தில் ஆழம் குறைவாக இருந்த நிலையில் அவரது கழுத்து பகுதி உடைப்பட்டு போனதாக தெரிகிறது.

அந்த நடிகையானவர் இது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டு அதில் தான் தற்போது உயிரோடு இருப்பது அதிர்ஷ்டம் எனவும் 4 மாத காலங்களுக்கு கழுத்தில் பட்டை அணிய வேண்டி உள்ளது என்பதனை சிகிச்சையில் இருந்தவாரே தெரியபடுத்தியுள்ளார்.

தற்போது இந்த நடிகை குயின்ஸ்லாந்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.மேலும் இவர் தனக்கு 2022 ஆம் ஆண்டு சரியாக அமையவில்லை எனவும் வருத்தம் தெரிவித்து புலம்பி வருவதாக கூறுகின்றனர்.