இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் -WHO எச்சரிக்கை! 

இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் -WHO எச்சரிக்கை! 

இந்தியாவில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இந்தியாவில் அடுத்த 2 வாரங்களில் கொரோனா பரவல் மிக வேகமாக அதிகரிக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பின் தலைமை அறிவியலாளர் செளமியா சாமிநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

உலக முழுவதும் கொரோனாவின் மூன்றாவது அலை மிக மோசமாக வீச தொடங்கி உள்ளது.மக்கள் அனைவரும் கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி வரும் நிலையில்,  அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா தொற்று எண்ணிக்கை 10 லட்சத்தை எட்டியிருப்பதாக அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

அமெரிக்காவில்  ஒரே நாளில்  5,57,425 க்கும், இதைதொடர்ந்து பிரான்சில் 271,8 பேருக்கும், இங்கிலாந்தில் 218,724 பேருக்கும் கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வேகமெடுக்க தொடங்கியுள்ள நிலையில், கொரோனா பரிசோதனை மற்றும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தியுள்ளது.