ஆப்கானிஸ்தானின் இஸ்லாமீய அமீரகம்... பெயர் மாற்றம் செய்த தாலிபான்கள்...

ஆப்கானிஸ்தான் நாட்டின் பெயரை ‘ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம்’ என பெயர் மாற்றம் செய்யவுள்ளதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானின் இஸ்லாமீய அமீரகம்... பெயர் மாற்றம் செய்த தாலிபான்கள்...

ஆப்கானிஸ்தானிலிருந்து இருந்து அமெரிக்க படை விலகியதை அடுத்து, முழு ஆதிக்கம் செலுத்திய தாலிபான்கள், நேற்று தலைநகர் காபூலை கைப்பற்றினர். தற்போது அந்நாட்டின் அதிபர் மாளிகையும் தாலிபான்கள் வசமாகியுள்ளது.

இந்த நிலையில், அந்நாட்டின் பெயர் ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய அமீரகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு,  விரைவில் அதிபர் மாளிகையிலிருந்து அறிவிப்பு வரும் என தாலிபான்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இதே பெயர் தான் அமெரிக்க படை நுழைவதற்கு முன் கடந்த 2001 இருந்ததாகவும், அங்கு பணிபுரிந்து வரும் அரசு அதிகாரிகள் பழமைவாதத்தை பின்பற்றி பணிக்கு திரும்பவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காபூலில் ராணுவ வீரர்கள் வெளியேறி வருவதால்,  அங்குள்ள சர்வதேச விமான நிலையமும் மூடப்பட்டுள்ளது.