இனிமே வாய்க்கும் சேர்த்து மாஸ்க் போட தேவையில்லை... மூக்குக்கு மட்டும் போடுற கோஸ்க் போதும்.!!

மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான முகக்கவசத்தை வடிவமைத்துள்ளது தென்கொரியா நிறுவனம்.

இனிமே வாய்க்கும் சேர்த்து மாஸ்க் போட தேவையில்லை... மூக்குக்கு மட்டும் போடுற கோஸ்க் போதும்.!!

கடந்த இரண்டு வருடங்களாக மக்களிடையே கோரத்தாண்டவம் ஆடும் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக நமது வாழ்கையின் ஒரு முக்கிய அங்கமாக முக கவசம் இருந்து வருகிறது. இதனிடையில் வித்தியாசமான முக கவசங்கள் மக்களிடையே கவனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில் தற்போது மூக்கை மட்டும் மறைக்கும் வகையிலான முகக்கவசத்தை உருவாகி அறிமுகப்படுத்தியுள்ளனர். இதற்கு முக கவசம் என சொல்வதனை விட மூக்கு கவசம் என அழைப்பது பொருத்தமாக இருக்கும் என சொல்கின்றன்ர்.  

இந்த முகக்கவசத்தை தென்கொரியாவை சேர்ந்த அட்மன் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இது போன்று ஒரு முகக்கவசத்தினை உருவாக்கி அதற்கு கோஸ்க் எனவும் பெயரிட்டுள்ளனர். இந்த பெயருக்கான விளக்கமாக மூக்கு என பொருள் தரும் 'கோ' என்ற கொரியன் சொல்லையும் மாஸ்க் என்ற ஆங்கில சொல்லையும் இணைத்து இந்த மூக்கு கவசத்திற்கு கோஸ்க் என்று பெயர் வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முகக்கவசம் அணிந்து கொண்டு அன்றாட வேலைகளை செய்வதற்கு சிரமமாக உள்ள நிலையில், மேலும் இதனை அடிக்கடி கழட்டி வைப்பதன் மூலம் முகக்கவசத்தில் கிருமி பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. எனவே தான் சாப்பிடும்போது மற்றும் அருந்தும்போது மூக்கை மட்டும் மூடிக்கொண்டு சாப்பிட வசதியாக இந்த மூக்கு கவசம் வடிவமைக்கப்பட்டுள்ளது.