ஊரடங்கை மீறி பிரதமர் இல்லத்தில் வைக்கப்பட்ட விருந்து...மன்னிபு கோரிய பிரதமர்!!

ஊரடங்கில் பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜான்சன் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஊரடங்கை மீறி பிரதமர் இல்லத்தில் வைக்கப்பட்ட விருந்து...மன்னிபு கோரிய பிரதமர்!!

இங்கிலாந்தில் கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருந்த நிலையில் விதிமுறைகளை மீறி பிரதமர் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

குறிப்பாக 2020-ம் ஆண்டு ஜூன் 19-ந்தேதி பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்தநாளையொட்டி அவரது பிரதமர் அலுவலகத்தில் அதிக அளவில் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டு விருந்து நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். மேலும் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது தொடர்பாக லண்டன் போலீசார் விசாரணையை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.

மேலும் இது குறித்து தொடா்பான அறிக்கைகள் முழுமையாக வெளியிடப்படாத போதிலும், முக்கிய தகவல்கள் அடங்கிய 12 பக்க அறிக்கைகள் மட்டுமே நேற்று முன்தினம் வெளியானது. வெளியிடப்பட்ட அறிக்கையில் பிரதமரின் இல்லம் மற்றும் அலுவலகத்தில் விருந்து  நிகழ்ச்சி வைத்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது பிரதமர் போரிஸ் ஜான்சனின் பதவிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதோடு அவரது சொந்த கட்சியினரே அவரை பதவியில் இருந்து விலக வலியுறுத்தி வந்துள்ளனர். 

இந்த நிலையில் ஊரடங்கின்போது விதிமுறையை மீறி பிரதமர் இல்லத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சிகளுக்காக போரிஸ் ஜான்சன் நாடாளுமன்றத்தில் மன்னிப்பு கோரினார். இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசிய அவர் மன்னிக்கவும் மக்களின் கோபம் குறித்து என்னால் உணர முடிகிறது. நாம் அனைவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள வேண்டும் தவறுக்கு வருந்துவதாகவும் அதே சமயம் இதனை கட்டாயமாக சரி செய்வேன் என்பதில் அவர் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.