நாங்கல்லாம் வேற மாறி... ஒன்றரை வருஷம் ஆச்சு எங்கள நெருங்குமா கொரோனா? குழந்தைசாமி கெத்து பேச்சு

நாங்கல்லாம் வேற மாறி... ஒன்றரை வருஷம் ஆச்சு எங்கள நெருங்குமா கொரோனா? குழந்தைசாமி கெத்து பேச்சு

உலகமே கொரோனா பாதிப்பால் முடங்கிப்போயுள்ள நிலையில் நிலையிலும், தங்கள் நாட்டில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு இல்லை என்று வடகொரிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில்டிசம்பர் மாதத்தில் சீனாவில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் சில மாதங்களில் உலகெங்கும் பரவி மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உலக வரைபடத்தில் அமெரிக்கா தொடங்கி, ஆஸ்திரேலியா வரை கொரோனா பாதிக்காத நாடுகளே இல்லை என்ற நிலை இருக்கிறது. 

ஆனால் தனது நாட்டில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா தெரிவித்துள்ளது, இது பற்றி அந்த நாடு கூறுகையில் இதுவரை  30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தியும் என்றால் நாட்டில் யாருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று வடகொரிய அரசு தெரிவித்துள்ளது. 

ஆனால் வடகொரியாவின் இந்த கருத்தை உலகின் பல்வேறு நாடுகள் நம்பவில்லை. மேலும் வடகொரியா கொரோனா தகவல்களை மறைப்பதாகவும், வடகொரியாவிலும் கொரோனா பாதிப்பு இருக்கும் என்றும் பல்வேறு நாடுகள் கூறியுள்ளன.  

பிற நாடுகளை ஒப்பிடும் போது வடகொரியாவில் போதிய மருத்துவவசதிகள் கிடையாது. இதனால் கொரோனால் அதிக உயிரிழப்புகளும் ஏற்பட்டிருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா காரணமாக வெளிநாட்டிலிருந்து வருபவர்களுக்கு வடகொரியா தடை விதித்துள்ளது. மேலும், தங்கள் நாட்டில் இருக்கும் தூதரக அதிகாரிகளையும் வெளியேற்றியுள்ளது. மேலும் வெளிநாட்டு உதவிகளும் தடைபட்டுள்ளதால் வடகொரியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.