மதுபழக்கத்தை அதிகரிக்க திட்டம் தீட்டும் ஜப்பான் அரசு.. இதில் புது போட்டி வேறு..!

வரி வருவாய் இழப்பால் மக்களிடமே ஐடியா கேட்கும் ஜப்பான் அரசு..!

மதுபழக்கத்தை அதிகரிக்க திட்டம் தீட்டும் ஜப்பான் அரசு.. இதில் புது போட்டி வேறு..!

மதுபழக்கத்தை அதிகரிக்க திட்டம்: தமிழ்நாட்டில் குடி பழக்கத்தை ஒழிக்க வேண்டும், மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என ஒவ்வொரு தலைவர்களும் மேடையேறி போட்டி போட்டுக் கொண்டு கூறி வரும் வேளையில் ஜப்பானில் மக்களிடம் மதுபழக்கத்தை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதாம். இதனை நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. ஜப்பான் நாட்டின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு என்ன காரணம் என்பது குறித்து பார்ப்போம். 

தமிழ்நாடும் மதுவும்: இந்தியாவில் தமிழ்நாட்டை பொருத்தவரை மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் மதுவில் இருந்து தான் கிடைக்கின்றது. அதனால் தான் தனியாரிடம் இருந்த மதுவிற்பனையை தற்போது அரசாங்கமே எடுத்து நடத்தி வருகிறது. ஒவ்வொரு முறை சட்டமன்ற தேர்தல் நடைபெறும் போதும், ஒவ்வொரு கட்சியினரும் கூறும் ஒரு வார்த்தை பூரண மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்பது தான். தலைவர்கள் மாறலாம் ஆனால் இந்த வார்த்தைகள் மட்டும் என்றுமே மாறாது. 

அதிகரிக்கும் மதுபழக்கம்: தமிழ்நாட்டில் தற்போது மதுப்பழக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. 21-வயதுக்குட்பட்டவர்கள் மது அருந்தக் கூடாது, அவர்களுக்கு மது விற்கக் கூடாது எனக் வாய்வழியே கூறி வந்தாலும் கூட, 21-வயதுக்குட்பட்டவர்கள் தான் தற்போது அதிகமாக மதுபழக்கத்திற்கு அடிமையாகி வருகின்றனர். அதனை தடுக்க இங்கு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

ஜப்பானில் புதிய திட்டம்: இங்கு இப்படி சென்றுக் கொண்டிருக்க, ஜப்பானில் என்னவென்றால் மக்களிடம் மது பழக்கத்தை அதிகரிக்க வேண்டிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறதாம். அட என்னப்பா சொல்றன்னு கேக்குறீங்களா? அட ஆமாங்க..

குறையும் மதுபழக்கம்: ஜப்பானில் மக்களிடையே மது அருந்தும் பழக்கம் குறைந்திருப்பதால், அந்நாட்டின் வருவாய் சரிவடைந்திருக்கிறதாம். இதனால் வருவாயை அதிகரிக்கத் தான் ஜப்பான் அரசு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறதாம். 

சேக் விவா பிரசாரம்: பொதுவாக ஒரு புதிய நடைமுறையை மக்களிடம் பரப்ப பிரசாரங்களை செய்வது வழக்கம். அந்த வகையில் மக்களிடம் மது பழக்கத்தை அதிகரிக்க சேக் விவா என்ற பிரசாரத்தை தொடங்கியிருக்கிறதாம் ஜப்பான். 20 முதல் 39 வயது வரை உள்ள ஜப்பானியர்கள் இந்த பிரசாரத்தில் ஈடுபட்டு மக்களிடமே யோசனைகள் கேட்டு வருகின்ரனராம். இது தொடர்பாக அடுத்த மாதம் 9-ம் தேதி அன்று போட்டி கூட நடத்துகின்றனராம். 

31 ஆண்டுகளுக்கு பிறகு குறைந்த வருவாய்: கொரோனா காலகட்டத்திற்கு முன்பு 2020-ம் ஆண்டில் ஜப்பானின் வரி வருவாய் 110 பில்லியன் டாலருக்கு மேலாக இருந்ததாகவும், கொரோனா ஊரடங்கால் பார்கள் மற்றும்  உணவகங்கள் மூடப்பட்டதால், மது விற்பனையும் சரிவை கண்டு இருப்பதாகவும் கூறுகின்றனர். இதனால் மது விற்பனை மூலம் கிடைத்த வரி வருவாய் அங்கு 31 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவை கண்டுள்ளதாம். 

வலுக்கும் எதிர்ப்பு: ஜப்பான் அரசின் இந்த அறிவிப்பு பல கண்டனங்களை சந்தித்து வருகிறது. மக்களை மதுவுக்கு அடிமையாக்க ஜப்பான் அரசு முயற்சிப்பதாகவும், ஆரோக்கியத்தை விட மதுப்பழக்கம் தான் முக்கியமா என பலரும் கேள்வி கனைகளை ஜப்பானுக்கு எதிராக எறிந்து வருகின்றனர்.