இந்த நிலையில் சர்வதேச நிதி நடவடிக்கை பணிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாகிஸ்தான் தொடர்ந்து "அதிகரித்த கண்காணிப்பு பட்டியலில்" உள்ளதாகவும் சாம்பல் பட்டியலில் நீடிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் அறிவித்துள்ளது.