டூம்ஸ்டே கடிகாரம் ஓட தொடங்கி விட்டது... இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை...

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதற்கான நேரம் வந்துவிட்டதாக, உலக நாடுகளின் தலைவர்களை இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கேட்டுக்கொண்டுள்ளார். 

டூம்ஸ்டே கடிகாரம் ஓட தொடங்கி விட்டது... இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் எச்சரிக்கை...

இங்கிலாந்தின் கிளாஸ்கோ நகரில் பருவநிலை மாற்ற மாநாடு தொடங்கியது. இதில் பிரதமர் மோடி உள்பட பல்வேறு நாட்டு தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றிய போரிஸ் ஜான்சன், உலகமானது, மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவை முன்கூட்டியே எச்சரிக்கும் டூம்ஸ்டே சாதனத்துடன் பிணைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து வெப்பமடையும் பூமியின் நிலையை, கற்பனையான ரகசிய ஏஜென்ட் ஜேம்ஸ் பாண்டுடன் ஒப்பிட்டு பேசிய அவர், கிரகத்தை அழிக்கும் ஒரு வெடிகுண்டுடன் கட்டப்பட்ட ஜேம்ஸ் பாண்ட், அதை செயலிழக்க முயற்சிப்பதாகவும், தற்போது நாமும் தோராயமாக அதே நிலையில் இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.

இப்போது டூம்ஸ்டே கடிகாரம் ஓடத் தொடங்கியது உண்மைதான் என்றும், கற்பனையல்ல எனவும் குறிப்பிட்டுள்ள போரிஸ் ஜான்சன், நிலக்கரி, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை எரிப்பதால் ஏற்படும் பருவநிலை மாற்றம் அச்சுறுத்தலாக இருப்பதாக தெரிவித்தார்.