பாக்தாத்தில் பயங்கர குண்டு வெடிப்பு... சுமார் 35 பேர் பலி...

பாக்தாத்தில் பயங்கர குண்டு வெடிப்பு... சுமார் 35 பேர் பலி...

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் பயங்கர குண்டுவெடிப்பு.
Published on
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள மார்கெட்டில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதலில் சுமார் 35 பேர் உயிரிழந்தனர்.
பக்ரீத் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க  பொதுமக்கள் அதிக அளவில் கூடியிருந்த நிலையில், இந்தத் தற்கொலைப்படை   தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.  தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்புப் படையினர் காயமடைந்தோரின் உடல்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த தாக்குதலில் 60 மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் 35 பேர் உயிரிழந்துள்ளனர்.  பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த தாக்குதல் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளால்  நடத்தப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈராக்கில் சமீப காலங்களில் நடத்தப்பட்ட மிகவும் மோசமான தாக்குதல் இதுவாகும். 
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com