சீனா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து...!!!

சீனா தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து...!!!

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த விபத்தில் சுமார் 38 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.  

அன்யாங் நகரில் உள்ள தொழிற்சாலையில் தீ விபத்து சம்பவம் நடந்துள்ளதாக சீன நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.  தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.  200க்கும் மேற்பட்ட மீட்புப் பணியாளர்கள் மற்றும் சுமார் 60 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தீயை அணைத்துள்ளனர்.
 
இந்த சம்பவத்தில்  இருவர் காயமடைந்துள்ளதுடன் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை தற்போது நன்றாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கிடைக்கப்பெற்ற தகவலின்படி, 63 வாகனங்கள் தீயணைப்புப் படை குழுக்களால் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டன. உள்ளூர் நேரப்படி இரவு 8 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது எனவும் இரவு 11 மணியளவில் தீ முற்றிலும் அணைக்கப்பட்டது எனவும் கூறப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் காவல்துறை தெரிவித்துள்ளது.  எனினும் தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.  சந்தேகத்தின் பேரில் சிலரை போலீசார் விசாரணைக்காக கைது செய்துள்ளதாக காவல்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. 

-நப்பசலையார்

இதையும் படிக்க:  சிரியா, ஈராக் மீது தாக்குதல் நடத்த திட்டமிடுகிறதா துருக்கி...காரணம் என்ன?!