சிரியா ராணுவத்தினருடன் ஐ.எஸ் தீவிரவாதிகள் மோதல்- குண்டு வீச்சால் பதற்றம் நீடிப்பு !
அரசு படைகளுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே மோதல் நடைபெற்று வருகிறது.

சிரியாவில் அரசு படைகளுக்கும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் மோதல்களால் அங்கு மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
சிரியாவின் ஹசாகா நகரில் அரசு படைகளை குறிவைத்து கட்டிடங்களின் மறைவில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதற்கு ராணுவத்தினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இருதரப்பினரிடையே நடைபெற்று வரும் மோதலினால் ஏற்பட்ட உயிரிழப்பு குறித்த விவரங்கள் வெளியாகவில்லை. ஹசாகாவில் அரசு படைகளால் சுற்றி வளைக்கப்பட்ட தீவிரவாதிகள் ராணுவ வாகனங்களில் ஏற்றப்பட்டு முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இந்த மோதல்களால் அங்கு மீண்டும் பதற்றம் காணப்படுகிறது.