ஆப்கானிஸ்தான் பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல் - 53 பேர் பலி!!

ஆப்கானிஸ்தான் பள்ளியில் தற்கொலைப் படைத் தாக்குதல் - 53 பேர் பலி!!

ஆப்கானிஸ்தானில் காபூல் பள்ளியில் நடத்தப்பட்ட தற்கொலைப் படைத் தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 53 ஆக அதிகரித்துள்ளது.

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்கு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில், கடந்த வெள்ளிக்கிழமை தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக யு.என். ஏ.எம். ஏ. எனப்படும் ஐக்கிய நாடுகளின் உதவிப் பணி அமைப்பு தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் உதவிப் பணி அமைப்பு அறிவிப்பு

தற்கொலைப் படை தாக்குதலில், 46 மாணவிகள் உள்பட 53 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், இளம் பெண்கள் உள்பட 110 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனித உரிமைகள் ஆணையம் இந்த குற்றச்செயல்களை ஆவணப்படுத்தி வருவதாகவும், உண்மையை ஆராய்ந்து, வெளிப்படையான தரவுகளை வெளியிட்டு வருவதாகவும் ஐக்கிய நாடுகளின் உதவிப் பணி அமைப்பு கூறியுள்ளது.