திடீர் தாக்குதல்.... சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.....

திடீர் தாக்குதல்.... சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு.....

இஸ்ரேலின் ஜெருசலேமில் யூத மத வழிபாட்டு தலம் அருகே நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 7 பேர் உயிரிழந்தனர்.  

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு நிலவி வருகிறது. இந்நிலையில், ஜெருசலேமில் உள்ள நிவி யாகொவ் பகுதியில் யூத வழிபாட்டு தளம் அருகே காரில் வந்த பயங்கரவாதி தான் வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்த இஸ்ரேலியர்கள் மீது சரமாரி துப்பாக்கிச்சூடு நடத்தினார். 

இதில், 7 இஸ்ரேலியர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல் சம்பவம் இஸ்ரேல், பாலஸ்தீனர்கள் இடையே போர் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.  

-நப்பசலையார்

இதையும் படிக்க:    பாகிஸ்தான்.... பொருளாதார நெருக்கடிக்கு காரணம் யார்?!!