திடீர் நிலநடுக்கம்..... அதிகரிக்கும் உயிரிழப்புகள்....

திடீர் நிலநடுக்கம்..... அதிகரிக்கும் உயிரிழப்புகள்....

Published on

ஈரான் தலைநகர் தெஹ்ரானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஈரானின் தலைநகரான தெஹ்ரானி திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த நிலநடுக்கமானது  ரிக்டர் அளவில்  5.9 ஆக பதிவாகியுள்ளது.  மேற்கு அஜர்பைஜான் மாகாணத்தில் உள்ள கோய் நகரில் லேசன நில நடுக்கம் உணரப்பட்டது. 

ரிக்டர் அளவில் 5.9  ஆக உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தால், கட்டிடங்கள் குலுங்கின.  இதனால், பீதி அடைந்த மக்கள் கட்டிடங்களை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடம் நோக்கி ஓடினர்.  இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி இருவர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  மேலும் 122 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com