இரு பெண்களை தாக்கிய சம்பவத்தால் - தேசிய நாகரீகம் அந்தஸ்த்தை பறிக்கொடுத்த சீனா!!

சீனாவில் உணவகத்தில் இரு இளம்பெண்கள் ஒரு கும்பலால் தாக்கப்பட்ட சம்பவத்தையடுத்து டாங்ஷான் நகருக்கு வழங்கப்பட்டிருந்த தேசிய நாகரீக நகரம் என்ற விருது திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இரு பெண்களை தாக்கிய சம்பவத்தால் - தேசிய நாகரீகம் அந்தஸ்த்தை பறிக்கொடுத்த சீனா!!

நகரில் உள்ள உணவகம் ஒன்றில்  உணவு அருந்திக்  கொண்டிருக்கும் பெண்ணிடம் ஒருவர் தவறாக நடக்க முயல அதை அந்தப் பெண் தடுக்கிறார்.

இதையடுத்து அந்த பெண்ணையும் உடன் இருந்த பெண்ணையும் அந்த நபரும் அவரது நண்பர்களும் சேர்ந்து கடுமையாக தாக்குகின்றனர்.

கடந்த 11-ம் தேதி சமூக வலைதளங்களில் இந்த காட்சி வைரலானதைத் தொடர்ந்து சீன மக்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட 9 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் டாங்ஷானுக்கு அரசு வழங்கியிருந்த தேசிய நாகரீக நகரம் என்ற அந்தஸ்து பறிக்கப்பட்டுள்ளது.

சமூக ஒழுங்கு உள்ளிட்ட எட்டு அம்சங்களின் அடிப்படையில் வழங்கப்படும் இந்த விருதை அந்த நகரம் கடந்த 2011 முதல் 4 முறை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.