இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம்...

இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம்...

இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முதலில் வடக்கு மாகாண ஆளுநராக இருந்தவர்,பிறகு ராஜினாமா செய்து கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்றார்.அவர் இன்று பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் சிறப்பு தரிசனம் செய்துள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் இலங்கை நாட்டின் கிழக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா  பழனி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ததற்காக வருகை தந்தார் .அப்போது கோவில் நிர்வாகத்தினர்  வரவேற்பு அளித்து ரோப் கார் மூலமாக மலைக்கோவிலுக்கு அழைத்துச் சென்று உச்சிக்கால பூஜையில் தரிசனம் செய்தார்.பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.முன்னதாக இலங்கை நாட்டின் யாழ்ப்பாணம் பகுதியில் விரைவில் நடக்கவுள்ள யாகத்திற்காக புலிப்பாணி ஆசிரமத்தில் உள்ள சிவானந்த புலிப்பாணி சுவாமிகளை அழைப்பதற்கான அழைப்புகளை கொடுத்து வரவேற்றார். 

மேலும் படிக்க | பன்றிக்காக அடுக்குமாடி கட்டிடமா? சீனாவை மிஞ்ச முடியாது போலயே!

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஜீவன் தியாகராஜன் இலங்கை நாட்டில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பிய போது, அதற்கு பதில் அளிக்க முடியாது எனவும்,அதேபோல் இலங்கையில் பொருளாதார சூழ்நிலை குறித்த கேள்விகேட்டபோது அது என் பொறுப்பு நான் பார்த்து கொள்வேன் என் மக்களை என பதில் கூறினார்.இப்போதைய ஆட்சி முறையை பற்றி கெட பொது பதில் அளிக்காமல் சென்றுவிட்டார் .மேலும் தான் சுவாமி தரசினம் செய்யவே வந்துள்ளேன்  இதை பற்றி இப்போது என் கேட்கிறீர்கள் என்று சிரித்துவிட்டு சென்றுவிட்டார்.

மேலும் படிக்க | உ.பி.,யின் வழியில் குஜராத்...காப்பி அடிக்கப்படுகிறதா தேர்தல் வாக்குறுதிகள்!!!