18 பேரை கடித்து குதறிய அணில்..கருணை கொலை செய்த அரசு! 

சாம்பல்நிற அணில் இரண்டு நாட்களில் 18 பேரை கடித்து குதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 பேரை கடித்து குதறிய அணில்..கருணை கொலை செய்த அரசு! 

சாம்பல்நிற அணில் இரண்டு நாட்களில் 18 பேரை கடித்து குதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் பக்லி டவுனில் விசித்திர அணிலுக்கு ஸ்ட்ரைப் என அப்பகுதி மக்கள் பெயர் வைத்துள்ளனர். இந்த அணிலுக்கு அந்த பகுதியை சேர்ந்த காரின் ரெனால்ட்ஸ் என்பவர் கடந்த மார்ச் மாதம் முதல் உணவு கொடுத்து செல்லப்பிராணி போல வளர்த்து வந்துள்ளார்.

ஆனால் சில நாட்களுக்கு முன்பு இந்த அணில் 18 பேரை கடித்து உள்ளது இதை அடுத்து கால்நடை மருத்துவர் ஒருவரால் பிடிக்கப்பட்ட இந்த அணில் பிரிட்டன் சட்டப்படி கருணைக் கொலை செய்யப்பட்டது.சாம்பல் நிற அணில் ஏற்படுத்திய பாதிப்புகள் காரணமாக இந்த வகை அணில்களை காட்டுக்குள் விட அந்த நாட்டு அரசு தடை விதித்திருந்தது .இதையடுத்து பொதுமக்கள் அளித்த புகாரின்  அடிப்படையில் ஸ்ட்ரைப் கருணை கொலை செய்யப்பட்டது.

இது குறித்து அப்பகுதியில் வசித்து வந்த ஒருவர் கூறும் போது, அணில் ஒரு நாள் தன்னை கடித்து வைத்து விட்டதாகவும், இதனால் தனக்கு இரத்தம் வந்ததாகவும் கூறினார்.மேலும் தனக்கு வீட்டை விட்டு வரவே பயமக இருப்பதாவும்,இதனால் அணில் கடித்த சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.