பயணிகள் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை..! பயணிகள் அதிர்ச்சி..!

துருக்கியில் பயணிகள் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை இருந்ததால் அதிர்ச்சி

பயணிகள் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை..! பயணிகள் அதிர்ச்சி..!

துருக்கி விமான நிலையம் : 

துருக்கியை சேர்ந்த சன் எக்ஸ்பிரஸ் நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் ஒன்று கடந்த 21ம் தேதி, துருக்கியின் அன்காரா நகரிலிருந்து ஜெர்மனிக்கு டஸ்ஸல்டார்வ் நோக்கி சென்றது. அதில் வழக்கம் போல் பயணிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது. 

விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவில் பாம்பின் தலை : 

அதில் பயணித்த ஒரு பயணிக்கு வழங்கப்பட்ட உணவில், பாம்பின் தலை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனை கண்டதும் அந்த பயணி அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டுள்ளார். அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பத்துவிட்டனர். 

உணவு விநியோக நிறுவனம் :

சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோவால் இந்த விவகாரம் பெரிதாகவே,  இது குறித்து விமானத்தில் உணவு விநியோகிக்கும் நிறுவனத்திடம் விமான ஊழியர்கள் புகார் தெரிவித்தனர். அதன் பின்னர் விமானத்தில் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்தது, சன் எக்ஸ்பிரஸ் நிறுவனம். 

விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை :

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், விமான பயணிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும் உயர்தர சேவை வழங்குவதையே தங்கள் நிறுவனம் லட்சியமாக கொண்டுள்ளது எனவும், கடந்த 30 ஆண்டுகளில் இது போன்ற சம்பவங்கள் ஒரு முறை கூட நிகழ்ந்ததில்லை எனவும் கூறியுள்ளது. மேலும் உணவு விநியோகிக்கும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விளக்கமும் கேட்டுள்ளோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது